’2016 முதல் 2024 வரை..’ ஐரோப்பிய யூனியனுடன் இந்திய வர்த்தகம்! எப்படி இருந்தது? ஓர் ஒப்பீடு!
2016 முதல் 2024 வரை இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2016இல் 1.9 பில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இருந்த நிலையில், 2024இல் 22.7 பில்லியன் டாலர் வர்த்தக உபரியாக மாறியது. சேவைகள் வர்த்தகத்திலும் 8.2 பில்லியன் டாலர் உபரியாக இந்தியா முன்னேறியது.
2016இல் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 31.9 பில்லியன் டாலராகவும் இறக்குமதி 33.8 பில்லியன் டாலராகவும் இருந்தது. அப்போது வர்த்தக பற்றாக்குறை 1.9 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2024இல் ஏற்றுமதி 71.4 பில்லியன் டாலராகவும் இறக்குமதி 48.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது.
வர்த்தகப்பற்றாக்குறை என்ற நிலை மாறி 22.7 பில்லியன் டாலர் வர்த்தக உபரி என்ற சாதகமான நிலையை இந்தியா அடைந்தது. இதேபோல ஐரோப்பிய யூனியனுக்கான சேவைகள் ஏற்றுமதி 2016இல் 12.1 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 12.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. அப்போது வர்த்தகப் பற்றாக்குறை 0.4 பில்லியன் டாலராகவும் இருந்தது.
2024இல் சேவைகள் ஏற்றுமதி 37.4 பில்லியன் டாலராகவும் இறக்குமதி 29.2 பில்லியன் டாலராகவும் இருந்தது. இப்பிரிவிலும் வர்த்தக பற்றாக்குறை என்ற நிலை மாறி 8.2 பில்லியன் டாலர் வர்த்தக உபரி என்ற சாதகமான நிலையை இந்தியா அடைந்தது

