”வெயில் அஸ்தமனமான பின் தங்கினால் மரணம் தான் பரிசு?!” - பாங்கர் கோட்டையின் திகில் வரலாறு!

”வெயில் அஸ்தமனமான பின் தங்கினால் மரணம் தான் பரிசு?!” - பாங்கர் கோட்டையின் திகில் வரலாறு!
”வெயில் அஸ்தமனமான பின் தங்கினால் மரணம் தான் பரிசு?!” - பாங்கர் கோட்டையின் திகில் வரலாறு!

ஜெய்பூர் நகரம் உருவாகிய கதை!

ஜெய்பூரில் ஆரவல்லி மலைத்தொடரை சுற்றிய பகுதிகள் தான் முந்தைய உண்மையான ஜெய்பூர் நகரம். அங்கு அமைந்துள்ள பாங்கர் கோட்டைக்கு பயந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, தங்களுக்கென்று ஒரு நகரத்தை உருவாக்கிக்கொண்டு அங்கு குடியேறினர். அதுதான் தற்போதைய ஜெய்பூர்.

என்னது பாங்கர் கோட்டையை பார்த்து மக்கள் பயப்பட்டார்களா? ... என்னங்க சொல்றீங்கனு கேட்பவர்களுக்கு, அந்த பாங்கர் கோட்டையை பற்றிய வரலாறு இதோ....

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அல்வர் மாவட்டத்தில் உள்ளது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாங்கர் கோட்டை இராஜா பகவந்த் தாசின் தலைநகராக இருந்தது. பகவந்த் தாசின் காலத்திற்கு பிறகு அவரது இரண்டாவது மகன் மாதே சிங் பட்டத்திற்கு வந்தார். பாங்கர் கோட்டை ஏன் சிதிலமடைந்தது. அந்த கோட்டையை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, பாங்கர் கோட்டை தொடர்பாக என்ன கதை சொல்லப்பட்டு வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

மந்திரவாதியின் ஆசையும், பாங்கர் கோட்டையின் அழியும் - உலாவும் கதை

”மாதேசிங்கின் மனைவி ரத்னாவதி இவள் பேரழகி, இவளை தனதாக்கிக்கொள்ள அங்கிருந்த சிந்து சேவ்டா என்றா ஒரு மந்திரவாதி முயன்றான்சிந்து சேவ்டா ரத்னாவதியை அடைவதற்கு பல வழிகளை மேற்கொண்டான். ஆனால் ரத்னாவதி அவற்றை எல்லாம் முறியடித்து மந்திரவாதியை நாட்டை விட்டு விரட்டியடித்தாள்.

மந்திரவாதி சிந்துசேவ்டா நாட்டை விட்டு வெளியேறாமல், ஆரவல்லி மலைத்தொடரில் மறைந்து வாழ்ந்துவந்தான். இருப்பினும், அவனுக்கு ரத்னாவதியின் மேல் இருந்த ஆசை போகவில்லை. அதனால், தனக்கு இடையூராக இருந்த அரசர் மாதேசிங்கை தனது மந்திர சக்தியால் கொல்ல சதி திட்டம் தீட்டினான். இதை தெரிந்துக்கொண்ட ரத்னாவதி தனது குடிமக்களுடன் சேர்ந்து மந்திரவாதியை தீர்த்துக்கட்ட அவன் இருப்பிடன் நோக்கி விரைந்தனர். அதற்கு முன்னதாக சிந்துசேவ்டா குடிமக்களுடன் அக்கோட்டையும் இடிந்து தரை மட்டமாகிவிடவேண்டும் என்று, தனது மந்திரசக்தியை ஏவினான்.

 கிட்டத்தட்ட அங்கு வசித்த 14000 மக்கள்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அவனது மந்திர சக்தியால் மாண்டனர். தப்பிப்பிழைத்த சில பேர், தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பித்து ஆமெல்லரில் குடியேறினர்” அது தான் தற்பொழுதுள்ள ஜெய்ப்பூர். என்பது தான் அந்த கதை.  இதை தவிர வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

துறவியின் சாபமும்.. கோட்டையின் அழிவும் - இப்படியும் ஒரு கதை!

பாங்கர் கோட்டை குரு பாலுநாத் என்ற துறவியால் சபிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோட்டை கட்டப்பட்ட இடம் ஒரு காலத்தில் முனிவரின் தியான ஸ்தலமாக செயல்பட்டது, அச்சமயம் அரசர் அவரிடம்,  இங்கு ஒரு கோட்டை கட்ட விரும்புவதாக  கேட்டதும்,  துறவி ஒப்புகொண்டதுடன், அரசருக்கு  ஒரு நிபந்தனையையும் வைத்தார், “ நீ கட்டும்  கோட்டையின் நிழல் எக்காரணத்தைக்கொண்டும என்னைத் தொடக்கூடாது“ என்று. நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட ராஜா, அவ்விடத்தில் இக் கோட்டையை கட்டினார்.  ஆன்னல் துரதிர்ஷ்டவசமாக  கோட்டையின் நிழல் அவர் மேல் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட துறவி, ஒரு சாபம் ஒன்றை விடுத்தார். இனி மேல் இங்கிருக்கும் வீடுகள் எவற்றிக்கும் கூரையே இருக்காது. மீறி கட்டினால் அது இடிந்து போகும் “ என்று சாபம் இட்டார்.   

அது நாள் முதல் இப்பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு வீடும் கூரையின்றி இருப்பதைக் காணமுடிகிறது.  இவ் ஊரின் இறுதி அழிவுக்கு சபித்த முனிவரே இதற்குக் காரணம் என்றும்  நம்பப்படுகிறது. இது தொடர்பாக  அப்பிரதேச மக்கள் ககூறுகையில், இந்த வீடுகளுக்கு மேற்கூரை அமைக்க முடியாது எனவும், வீடு கட்டினாலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்களால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக, அமானுஷ்யங்களை நம்புவது கடினம் தான் என்றாலும், சில இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அரசாங்கம் கூறும்போது, அதில் ஏதோ உண்மை  இருக்குமாறு மக்கள் மனதில் எண்ணம் உருவாகி விடுகிறது. அவ்வாறு அரசாங்கம் கூறிய இடங்களில் இந்த பாங்கர் கோட்டையும் ஒன்று. அங்கு நீங்கள் சைன்போர்டுகளைக் கூட பார்க்க முடியும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அங்கு இருக்க வேண்டாம் என்று அதில் எச்சரிக்கிறது. இதையும் மீறி அங்கு சென்றவர்களின் சிலரின் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

கோட்டைக்கு சென்றவர்கள் என்ன சொல்கிறார்கள்!?

நாங்கள் அங்கு சென்ற பொழுது, அதன் கம்பீரமான கட்டிடக்கலையை பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  ஆனால், எங்களுக்குள் ஒரு பதட்ட உணர்வுடன் இருப்பதை அறிந்தோம், எங்களை அறியாமலேயே ஒரு கவலையுடனும் அமைதியின்மையுடனும் இருந்தோம்“ என்கிறார்கள். மற்றும் சிலர், “ யாரோ ஏங்களை சுற்றிப் பின் தொடர்வது போன்ற ஒரு வித்தியாசமான  உணர்வைப் பெற்றோம்’ என்றும் கூறுகின்றனர்.  உள்ளூர் வாசிகளே ,சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அங்கு செல்வது இல்லை. இரவில் பங்கார் கோட்டைக்குள் செல்வது அல்லது தங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் துறை (ASI) சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மற்றும் சூரியன் உதிக்கும் முன் வளாகத்தில் தங்குவதற்கு எதிராக மக்களை எச்சரிக்கும் வகையில் பங்கரின் பல இடங்களில் பலகைகளை வைத்துள்ளார்கள்.  அங்கிருக்கும் உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இரவில் கோட்டைக்குள் சென்ற எவரும், அவர்களின் கதையைச் சொல்லத் திரும்பியதில்லை, ஏனெனில் இரவில் அங்கு ஆவிகள் உலவுகிறது” என்கிறார்கள்.

விபரீதத்தில் முடிந்த கிராம வாசிகளின் முயற்சி!

ஒருமுறை கிராமவாசிகள், கோட்டையின் உண்மைத்தன்மையை அறிந்துக்கொள்ள, மூன்று துணிச்சலான இளைஞர்களை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பங்கர் கோட்டை வளாகத்தில் தங்கவைத்தனர். அவர்கள் பயம் கொள்ளாமல் இருக்க,  தீப்பந்தம் பொருத்தப்பட்டிருந்த போதிலும், அந்த மூவரில் ஒருவர் செங்குத்தான கிணற்றில் விழுந்தார்., ஆனால் உடனடியாக, அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும்,  முன்னரே தீர்மானிக்கப்பட்டது போல்  அவர்கள் மூவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி  இறந்தனர். என்றும் கூறுகின்றனர். 

ஆய்வுக்கு சென்றவர்கள் என்ன சொல்கிறார்கள்!

அதன் ஆய்வுக்காக சென்ற வேறு சிலரோ, அக்கோட்டையில் அமானுஷ்ய சக்தி என்று ஏதும் இல்லை. உண்மையில் கோட்டையை சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் மிருகங்களின் இரைச்சலும், மரங்கள் காற்றில் உராயும் சத்தமே அமானுஷ்யத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

 எது எப்படியோ ஒரு முறை ஜெய்ப்பூர் சென்று, பாங்கர் கோட்டையை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். நீங்களும் ரெடிதானே?  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com