மாணவர்களுக்கு வீடு தேடி வரும் மதிய உணவு - மாநில அரசுகளின் உத்தரவு

மாணவர்களுக்கு வீடு தேடி வரும் மதிய உணவு - மாநில அரசுகளின் உத்தரவு
மாணவர்களுக்கு வீடு தேடி வரும் மதிய உணவு - மாநில அரசுகளின் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவினை வீட்டிற்கு சென்று கொடுக்கும் திட்டத்தை மேற்கு வங்கம், டெல்லி, அசாம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. கடந்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய உணவை மாணவர்களுக்கு வீட்டில் கொண்டுசென்று கொடுங்கள் என அறிவுறுத்திருந்தது. இல்லையென்றால் உணவு சமைக்க தேவையான பொருட்கள் அல்லது அதற்கான பணத்தை பெற்றோர்களிடம் கொடுங்கள் என கூறியிருந்தது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களின் அரசுகல் உடனடியாக இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வீடு தேடி மதிய உணவை வழங்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி ஊழியர்கள் இதை செய்ய வேண்டும் எனவும், ஏனென்றால் அவர்கள் அத்தியாவசிய பணிக்கு கீழ் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று அசாம் மாநிலத்திலும் மதிய உணவை மாணவர்களுக்கு வீட்டிற்கு கொண்டு கொடுக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் மாணவர்களின் வீட்டிற்கு மதிய உணவு அனுப்பப்படுகிறது. ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்கள் 10 நாட்களுக்கு சேர்த்து மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளன.

டெல்லியிலும் மாணவர்களுக்கான மதிய உணவை வீடுகளில் கொண்டு சேர்க்க முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் ஏற்கெனவே இந்த திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஜம்மூ-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com