எத்தனை விக்கெட் போச்சு : குழந்தைகள் இறப்பு கூட்டத்தில் அமைச்சருக்கு கிரிக்கெட் கவலை
பீகாரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. குழந்தைகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் இருந்தது.
இந்தியா பேட்டிங்கை பார்த்து விட்டு கூட்டத்துக்கு வந்த அமைச்சருக்கு இருப்பு கொள்ளவில்லை போல. பாகிஸ்தான் நிலை குறித்து அறிய அத்துணை ஆர்வமாக இருந்திருக்க வேண்டும். குழந்தைகள் இறப்பு குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது , திடீரென அமைச்சர் மங்கள் பாண்டே அங்கிருந்தவர்களிடம் “எத்தனை விக்கெட் போச்சு” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் நான்கு என பதிலும் அளித்தார்.
இதுவரை பீகாரில் 104 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும் இது குறித்து முறையான நடவடிக்கை இல்லை எனவும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஒருவரே இப்படி நடந்து கொண்டது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Source : Hindustan Times