மத்திய இடைக்கால பட்ஜெட் | “எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை” - ரகுநாதன்

மத்திய பட்ஜெட் குறித்து இந்திய தொழில் முனையம் தேசிய தலைவர் ரகுநாதன் புதிய தலைமுறைக்கு பேட்டியை விரிவாக பார்க்கலாம்...
இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025puthiya thalaimurai

செய்தியாளர்: ராஜ்குமார்

மத்திய பட்ஜெட் குறித்து இந்திய தொழில் முனையத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. வேலை வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பட்ஜெட் தாக்கல் நேரத்தில் கூட போர் நடக்கும் இஸ்ரேல் பகுதிக்கு 10 ஆயிரம் பேர் வேலைக்கு செல்லும் நிலை இருக்கிறது.

small industries
small industriespt desk

கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகை கூட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதால் வேலை வாய்ப்பு இல்லாமல் போகுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு அறிவிப்புகள் எதுவும் இல்லை.

இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் | “ஒரு சின்ன விஷயம் கூட விவசாயிகளுக்கு இல்லை...” - இளங்கீரன், விவசாயிகள் சங்கம்

ஒரு சில அறிவிப்பு மட்டும் செய்து இருக்கிறார். சோலார் யூனிட் செயல்பாடு குறித்த அறிவிப்புகள் MSME துறை ஜி.எஸ்.டி, கடன் பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், அவர்களுக்கான அறிவிப்பு இல்லாமல் இருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com