கூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

கூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

கூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

கூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எவ்வாறு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கூகுள் பே அப் மூலம் பயனாளர்கள் தங்களின் வங்கி கணக்குகளை இணைத்து பணபரிவர்த்தனை செய்யமுடியும். இதற்கு பயனாளர்களின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மட்டுமெ தேவைப்படும். அதனால் மக்கள் எளிதில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி சட்டத்தைமீறி செயல்பட்டுவருவதாக பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில் “கூகுல் பே ரிசர்வ் வங்கியிடம் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவகிறது. அத்துடன் இந்த செயலி பணிபரிவர்த்தனை சட்டத்தை மீறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் ஏஜே பாம்பானி கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூகுள் பே எவ்வாறு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டுவருகிறது என கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை நிறுவனங்களில் கூகுள் பே இல்லாத நிலையில் அது எவ்வாறு இயங்கி வருகிறது என்றும் வினவினர். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com