மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திட்டம்... தேசிய ஜனநாயக கூட்டணியின் வியூகம் என்ன?
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதிகள் மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வியூகம் என்ன?, மக்களவை, மாநிலங்களவையில் யார் யாருக்கு எவ்வளவு பலம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 3 காலியிடங்களை தவிர்த்து தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சபாநாயகர் உட்ட 540ஆக உள்ளது. இதில் அரசமைப்பு சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற 3இல் 2 பங்கு ஆதரவு. தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற 360 வாக்குகள் தேவை.
கடந்த ஏப்ரலில் நடந்த சிறப்பு கூட்டத்தொடரின்போது மக்களவையில் 528 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் 54 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோல்வியடைந்தது. தற்போது மக்களவையில் என்டிஏவின் நேரடி பலம் 320 அதிகரித்துள்ளது.
பாஜக 240, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் 20, தெலுங்கு தேசம் 16, சிவசேனா ஷிண்டே அணி - 13, ஐக்கிய ஜனதா தளம் - 12, லோக் ஜனசக்தி - 5 மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம், ஜனசேனா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தலா 2 உறுப்பினர்களை கொண்டுள்ளன.
இதன்மூலம் மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற தேவையான 360 வாக்குகளை எட்ட, என்டிஏவுக்கு இன்னும் 40 வாக்குகள் மட்டுமே கூடுதலாக தேவைப்படுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி சாராத எம்பிக்கள் 34 பேர் உள்ளனர்.
திமுகவுக்கு 22, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிக்கு 8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸூக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையை பொறுத்தவரை கடந்த ஏப்ரலில் என்டிஏ வசம் சுமார் 130 முதல் 134 இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மையை எட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்கள் குறைவாக இருந்தன.
தற்போது என்டிஏவின் பலம் 155ஆக அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு 117, அதிமுகவுக்கு 4, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 4, தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் அணிக்கு 4, தெலுங்கு தேசத்துக்கு 4, சிவசேனா ஷிண்டே அணிக்கு 2, பாமகவுக்கு 1 மற்றும் பிற கட்சிகளுக்கு 19 வாக்குகள் உள்ளன.
இதனால் மாநிலங்களவையில் தற்போதுள்ள 244 உறுப்பினர்கள் அடிப்படையில் பெரும்பான்மையான 162 வாக்குகளை எட்ட, என்டிவுக்கு வெறும் 7 வாக்குகள் மட்டுமே தேவைப்படுகின்றன. என்டிஏ, இண்டியா கூட்டணி சாராத வாக்குகளை பொறுத்தவரை 21 உள்ளன. இதில், திமுகவுக்கு 8, பிஜு ஜனதா தளத்துக்கு 5, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 4, பாரத் ராஷ்டிர சமிதிக்கு 3, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிக்கு 1 வாக்கு உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு கட்சிகள் ஆதரவளித்தாலோ அல்லது வாக்கெடுப்பை புறக்கணித்தாலோ மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.

