அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்த் தப்பிய பெண் - வெளியான சிசிடிவி காட்சி

அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்த் தப்பிய பெண் - வெளியான சிசிடிவி காட்சி
அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்த் தப்பிய பெண் - வெளியான சிசிடிவி காட்சி

ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலங்கானாவில் கொட்டி வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்ததால் தத்தளித்து வருகின்றன. தலைநகர் ஹைதராபாத் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், பாலங்கள், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹைதராபாத் மட்டுமின்றி, பண்ட்லகுண்டா, ரங்காரெட்டி, யதாத்ரி புவனகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர்.

ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் வீடுகள், கட்டடங்கள் சேதமாகி வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தில் சாலையில் பெண் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது இரண்டு அடுக்கு மாடி கொண்ட வீடு ஒன்று முழுவதுமாக திடீரென சரிந்து விழுந்தது. இதில் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடு இடிந்து விழுந்ததும் அப்பகுதி முழுவதும் புழுதிக்காடாக காட்சி அளித்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து மொகல்பூரா ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஏ ரவி குமார் கூறுகையில், “புகழ்பெற்ற அக்கண்ணா மடன்னா கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த அந்த வீடு நேற்று மாலை 5:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த கட்டடம் இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com