"அக்.15 வரை ஹோட்டல்கள் திறக்க தடை?" சமூக வலைத்தளங்களில் உலாவும் போலி கடிதம்

"அக்.15 வரை ஹோட்டல்கள் திறக்க தடை?" சமூக வலைத்தளங்களில் உலாவும் போலி கடிதம்
"அக்.15 வரை ஹோட்டல்கள் திறக்க தடை?" சமூக வலைத்தளங்களில் உலாவும் போலி கடிதம்

அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஹோட்டல்கள் திறக்கப்படாது என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஹோட்டல்கள் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பார்சல் சாப்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான். இந்நிலையில் ஹோட்டல்கள் எப்போது திறக்கப்படும் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதில் மத்திய அரசு உத்தரவு என்ற பெயரில் ஒரு போலியான கடிதம் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஹோட்டல்கள் திறக்க தடை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தப் போலிச் செய்தியால் தங்களது எதிர்காலம் குறித்தும் அச்சமடைந்தார்கள். இந்நிலையில் இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அதில் "ஹோட்டல்கள் அக்டோபர் 15 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி வந்தது. அதில் துளியும் உண்மை இல்லை. அதுவொரு போலியான செய்தி. இதுபோன்ற எந்த அறிவிப்பும் இதுவரை சுற்றுலாத்துறை சார்பாக வெளியிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க போலியானது. கொரோனால் சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இதுபோல வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டும் நம்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com