மாட்டிறைச்சி சமைத்த ஹோட்டல் ஊழியர்கள் கைது

மாட்டிறைச்சி சமைத்த ஹோட்டல் ஊழியர்கள் கைது

மாட்டிறைச்சி சமைத்த ஹோட்டல் ஊழியர்கள் கைது
Published on

ஜெய்ப்பூரில் மாட்டிறைச்சி சமைத்ததாக, ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது ஹோட்டல் ஹயாத் ரப்பானி. இங்கு மாட்டிறைச்சி சமைத்ததாகத் தகவல் வெளியானதை அடுத்து, ராஷ்டிரிய மகிளா கௌ ராக்ஷாக் சேவா மண்டல் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு சென்றனர். அங்குள்ள ஊழியர்களை அடித்த அவர்கள், ஹோட்டலை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரப்பரப்பு நிலவியது. அங்கு வந்த முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அங்கிருந்தவர்களை வெளியேற்றி ஹோட்டலை மூடினர். ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com