வசமாக சிக்கிய விடுதி துப்பரவு பணியாளர்.. மொபைலில் சிக்கிய மாணவிகளின் பகீர் வீடியோக்கள்!

வசமாக சிக்கிய விடுதி துப்பரவு பணியாளர்.. மொபைலில் சிக்கிய மாணவிகளின் பகீர் வீடியோக்கள்!
வசமாக சிக்கிய விடுதி துப்பரவு பணியாளர்.. மொபைலில் சிக்கிய மாணவிகளின் பகீர் வீடியோக்கள்!

கான்பூரில் மாணவிகளை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்த தனியார் விடுதி துப்புரவாளரை மாணவிகளின் புகாரின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கான்பூர் துல்சி நகரில் மருத்துவ தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியை காவல்துறை அதிகாரியான கூடுதல் எஸ்.பி ஒருவர் நடத்திவருகிறார். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவிகள் வந்து இங்கு தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இன்று, அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளரான ஆண் ஒருவர், ஒரு மாணவியை ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

அதை கவனித்த மற்றொரு மாணவி உடனடியாக அந்த நபரிடமிருந்து செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார். அதில் அந்த வீடியோ மட்டுமல்லாமல் வேறு சில மாணவிகளையும் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மாணவிகள் அருகிலிருந்த காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தனர். அதன்பேரில் துப்புரவு பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா டுடேவிற்கு ஏசிபி கல்யாண்புர் தினேஷ் சுக்லா கூறுகையில், மாணவிகளிடமிருந்து துப்புரவு பணியாளர்மீது புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com