\
பிறந்து 3 நாள் ஆன குழந்தையின் காலை உடைத்த ஊழியர்

பிறந்து 3 நாள் ஆன குழந்தையின் காலை உடைத்த ஊழியர்

பிறந்து 3 நாள் ஆன குழந்தையின் காலை உடைத்த ஊழியர்
Published on

பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் காலை ஈவு இரக்கமின்றி மருத்துவமனை ஊழியர் உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர், அந்தக் குழந்தையின் காலை உடைத்துள்ளார். பின்னர் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி, அதனை வேறு மருத்துமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டேராடூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தக் குழந்தையின் கால் உடைக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குழந்தை முதலில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் குழந்தையின் காலை ஊழியர் உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது ‌தெரியவந்தது. இதை ஆதாரமாக வைத்து அந்த ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com