இந்தியா
பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநர் - மருத்துவமனை ஊழியர்கள்! #ShockingVideo
ஐதராபாத்தில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த ஆம்புலன்ஸொன்று, நேற்று வேகமாக சென்றுள்ளது.
அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதை கண்ட சிலர், உள்ளே நோயாளிகள் இருப்பார்களே என எண்ணி அவசர அவரமாக மற்ற வாகனங்களை நிறுத்திவைத்துவிட்டு, சிக்னலை க்ளியர் செய்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். அப்படி சென்ற அந்த ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்று அப்பகுதியில் உள்ள டீ கடையில் நின்றுள்ளது.
ambulancept desk
இதனை கவனித்த அங்கிருந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
ஏனென்றால் அங்கு ஆம்புலன்ஸில் இருந்த டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டும் டீ, குளிர்பானம் அருந்திக் கொண்டும் இருந்துள்ளனர். இதையடுத்து அந்த காட்சியை உடனே வீடியோ பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்தனர்.