நிர்வாணமாக 2 கி.மீ தூரம் அழுதபடியே சென்ற 15 வயது சிறுமி; உ.பியில் தொடரும் பாலியல் கொடூரம்!

நிர்வாணமாக 2 கி.மீ தூரம் அழுதபடியே சென்ற 15 வயது சிறுமி; உ.பியில் தொடரும் பாலியல் கொடூரம்!
நிர்வாணமாக 2 கி.மீ தூரம் அழுதபடியே சென்ற 15 வயது சிறுமி; உ.பியில் தொடரும் பாலியல் கொடூரம்!

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இத்தகைய கொடூரங்கள் நடப்பது மக்களை நடுநடுங்க வைத்து வருகிறது.

இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நிர்வாணமாக சாலையில் நடந்துச் சென்ற சிசிடிவி காட்சி ஒன்று காண்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது, மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள மாவட்ட எஸ்.பி. சந்தீப் குமார் மீனா, “இந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதில் நவ்ஷி அலி என்பவர்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

போஜ்பூர் கிராமத்துக்கு அடுத்துள்ள கிராமத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அந்த ஐவர் கும்பல் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அச்சிறுமி நிர்வாணமாக மொராதாபாத்தில் இருந்து தாகுர்த்வாரா வரை கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அழுதபடியே வந்திருக்கிறார்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் சிறுமியை நிர்வாணமாக அனுப்பிவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பியோடியிருக்கிறார்கள். சாலையில் நடந்து வரும் போது தொடர்ச்சியான உதிரப்போக்கு இருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என எஸ்.பி. சந்தீப் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com