கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ

கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ

கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ
Published on

கர்ப்பிணி மனைவியின் கண்முன்பாகவே அவரது கணவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனையில் இருந்து ஒரு தம்பதி வெளியே வருகின்றனர். அப்படியே இருவரும் மிக இயல்பாக பேசிக்கொண்டே முன்னால் உள்ள கேட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர். அப்போது அவரது பக்கத்தில் ஒரு பெண்மணியும் நடந்து செல்கிறார். அவர்களுக்கு பின்னால் வாட்ட சாட்டமான ஒரு இளைஞர் அந்தத் தம்பதியை நோக்கி பின் தொடர்கிறார். அவரது கையில் ஏதோ ஒரு பயங்கர ஆயுதம் உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் கர்ப்பணி பெண்ணுடன் செல்லும் அவரது கணவரை பின்னால் இருந்து கொடூரமாக தாக்குகிறார். அடிப்பட்ட வேகத்தில் அந்தக் கணவர் மயங்கி தரையில் சரிகிறார். அப்போதும் விடாமல் கீழே விழுந்தவரை ஓங்கி அடிக்கிறார் அந்த மர்ம நபர்.

என்ன நடக்கிறது? யார் அவர்? ஏன் இவரை தாக்குகிறார் என்று ஒன்று புரியாத ஒரு பெண்மணி பதறி ஓடுகிறார். அடிப்பட்டவரின் மனைவி உதவிக்காக அருகில் உள்ளவர்களை அழைப்பதற்காக ஓடுகிறார். இந்தக் கொடூர சம்பவம் முழுக்க சில நொடிகளுக்கு நடந்தேறி முடிந்து விடுகிறது. இந்த சிசிடிவி வீடியோ பதிவில் உள்ள காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றது தெலங்கானாவிலுள்ள நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஜோதி மருத்துவமனையின் முன்பாகதான். இந்தக் கொடூர தாக்குதலுக்கு ஆளானவர் ப்ரனய் பெருமல்லா. இவரது மனைவி அம்ருதா கண் முன்பாகதான் அவர் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இப்போது மனைவி அம்ருதா மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இவரை பரிசோதிப்பதற்காகதான் ப்ரனய், ஜோதி மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வந்துள்ளார். அந்தச் சமயத்தில்தான் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அதுவும் பட்டப்பகலில் அதிக மக்கள் புழங்கும் மருத்துவமனையின் முன்பாக நடந்தேறியுள்ளது.  நடைபெற்ற தாக்குதலில் ப்ரனய் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாக தகவல் கூறுகிறது காவல்துறை. 

ப்ரனய் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. இவரது மனைவி அம்ருதா வேறுவகுப்பை சேர்ந்தவர் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொடூரக் கொலை செய்தவரை தேடி வருவதாக கூறியுள்ளனர். ஆனால் ப்ரனய் வீட்டார் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை கைத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இவர் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். மிர்யாலகுண்டாவில் இவர் தொழில் செய்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. 

கடந்த 2016ம் வருடம் தமிழத்தில் இதைபோன்று கவுசல்யாவின் கணவர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

courtesy:thenewsminute 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com