போராட்டத்தால் ஸ்தம்பித்த ‘ஹாங்காங்’

போராட்டத்தால் ஸ்தம்பித்த ‘ஹாங்காங்’
போராட்டத்தால் ஸ்தம்பித்த ‘ஹாங்காங்’

ஹாங்காங்கில் நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக, கைதிகள் சட்டத்தில் ஓர் மாற்றத்தை ஹாங்காங் அரசு அண்மையில் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் முதல் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை வார இறுதி நாள்களில் மட்டுமே போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வார நாள்களிலும் போராட்டம் வெடிக்கத் தொடங்கி உள்ளது. போராட்டத்தின் தாக்கத்தை அடுத்து ஹாங்காங் அரசும் சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. எனினும் சட்டத்தை நிரந்தரமாக கைவிடக்கோரி பல்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

நேற்றைய தினம் நடந்த போராட்டத்தில், லட்சக்கணக்கானோர் ஈடுபட்டதால் ஹாங்காங் நகரமே ஸ்தம்பித்தது. நகரின் 11க்கும் மேற்பட்ட இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கட்டுபடுத்த காவல்துறையினர் முயன்றனர். சாலை மறியல், ரயில் மறியல், விமான நிலைய போராட்டம் என போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் நகரின் போக்குவரத்து சேவை அனைத்துமே முடங்கின. 

ஹாங்காங் விமான நிலைய வாசலில் நடைபெற்ற போராட்டத்தால், 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 139 காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்துள்ள நிலையில், 420 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தலைவர் கேரி லாம், ஹாங்காங் அபாயகரமான நிலைமைக்கு செல்வதாகக் கூறி இருக்கிறார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com