ஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பதவியில் இருந்து மெஹபூபா முப்ஃதி இராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் வோரா ஒருபக்கம் தேசிய மாநாட்டு கட்சி தலைவரை அழைத்து பேசி வருகிறார். டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா , சில  மத்திய உள்துறை  அமைச்சரை சந்தித்துள்ளார்

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்தும் யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகபட்சம் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தவே வாய்ப்புள்ளதால், கூடுதல் படைகளை அனுப்புவது குறித்தும் அமர்நாத் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் கேட்டறிந்து வருகிறார்

பின்னணி

பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்ஃதி தனது இராஜிநாமாவை ஆளுநர் என்.என்.வோராவிடம் அளித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 5 மணிக்கு பேச உள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , பாஜக தனது தவறை ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் இந்த கூட்டணி நீண்ட காலம் செல்லாது என்று முன்பே சொன்னதாகவும் தெரிவித்தார். 

இது போன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com