\
நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
Published on

நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள், மத்திய பாதுகாப்பு படைகள், நிதி புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் மாநில டிஜிபிக்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது அவர், பயங்கரவாதம், சர்வதேச பயங்கரவாத குழுக்கள், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், போதைப்பொருள் பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் போன்றவற்றால் தொடரும் அபாயத்தை சுட்டிகாட்டியதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சவால்களை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு படைகளுக்கிடையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com