இஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள் 

இஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள் 
இஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள் 

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் கல்லறைக்காக இந்து மக்கள் தங்கள் இடத்தை தானமாக கொடுத்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள பெலாரிகான் கிராமத்தில் ஒரு இஸ்லாமிய கல்லறை உள்ளது. இந்தக் கல்லறைக்கு அருகிலுள்ள இடம் யாருக்கு சொந்தம் என்று அங்கு வசிக்கும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்த நிலம் தற்போது இஸ்லாமிய மக்களின் கல்லறைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நிலம் கொடுத்தவர்களில் ஒருவரான சூர்ய குமார் மகாராஜ், “இந்த நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது. ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கல்லறைக்கு அருகிலுள்ளது. இங்கு அவர்கள் அடக்கம் செய்யும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தோம். எனினும் தற்போது இந்த நிலத்தை அவர்களுக்கே கொடுத்துவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 8 இந்து மக்கள் தங்களின் 1.25 பிச்சாஸ் (Bissas) அளவிலான நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்கு அங்குள்ள இஸ்லாமிய மதத் தலைவர் அப்துல் ஹக், “இந்து மக்களின் இந்தச் செயல் இரு மத மக்களிடம் அன்பை அதிகரித்துள்ளது. அத்துடன் இது இரு மத மக்களிடம் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கு நல்ல உதாரணமாக அமையும்” எனக் கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமிய மக்களுக்குள் பிரச்னை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அதே மாநிலத்திலுள்ள ஒரு தரப்பு மக்களின் இந்தச் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com