அமித்ஷா
அமித்ஷாமுகநூல்

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்... உள்துறை அமைச்சர் அமித்ஷா!

ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி இல்லை என்றும் மொழிகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Published on

சில நாட்களுக்கு முன்னதாக, ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார் இது சர்ச்சையாக மாறியநிலையில், பலரின் கண்டனத்தை பெற்றது.

இந்தநிலையில், ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்றும், அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்களால் அதை பிரிக்க முடியவில்லை. ஆனால், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவை ஒன்றிணைக்க நமது மொழிகள் ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறுவதை நாங்கள் உறுதி செய்வோம். இதற்காக, அலுவல் மொழித் துறை செயல்படும்.

பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்படும் அடித்தளம் 2047-ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும். ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும் வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்துவோம். ஜேஇஇ, நீட், கியூட் போன்ற தேர்வுகள் இப்போது 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முன்னதாக, சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை மாற்றி 13 மொழிகளில் தேர்வை எழுத அனுமதித்துள்ளோம்.

அமித்ஷா
#634... விண்வெளிக்குள் இந்தியக் காலடி: சுபான்ஷூ சுக்லாவின் மைல்கல் பயணம்!!

இன்று 95 சதவிகிதத் தேர்வர்கள் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரும் நாள்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் மனதார நம்புகிறேன். ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com