கன்னடத்தில் ட்ரெண்டாகும் "இந்தி கொத்தில்லா‌ ஹோகோ"‌

கன்னடத்தில் ட்ரெண்டாகும் "இந்தி கொத்தில்லா‌ ஹோகோ"‌

கன்னடத்தில் ட்ரெண்டாகும் "இந்தி கொத்தில்லா‌ ஹோகோ"‌
Published on

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்திக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

"இந்தி தெரியாது போடா" என்ற வாசகம் அண்மையில் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனதையடுத்து, அதே வாக்கியத்தை கன்‌னடத்தில் "HINDI GOTHILLA HOGO" என மொழி பெயர்த்து கர்நாடகாவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் தனஞ்செயா ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான கன்னட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டிஷர்ட்களை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னடர்கள், பெங்களூரு ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை பெயர்த்தெடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com