'இந்துக்கள் கலவரத்தை விரும்புவதில்லை..லவ் ஜிஹாத் ஒரு சதி'-பரபரப்பை கிளப்பிய அசாம் முதல்வர்

'இந்துக்கள் கலவரத்தை விரும்புவதில்லை..லவ் ஜிஹாத் ஒரு சதி'-பரபரப்பை கிளப்பிய அசாம் முதல்வர்
'இந்துக்கள் கலவரத்தை விரும்புவதில்லை..லவ் ஜிஹாத் ஒரு சதி'-பரபரப்பை கிளப்பிய அசாம் முதல்வர்

’’இந்துக்கள் பொதுவாக கலவரங்களுக்கு பங்கேற்பதில்லை”. நாட்டில் நடக்கும் பெரும்பாலான வகுப்புவாத வன்முறைகளுக்கு பாஜக காரணம் என எதிரிகள் சித்தரிக்க விரும்புகிறார்கள் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பேசிய அமித் ஷாவின் கருத்துகள் பற்றி விரிவாகப் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "2002-க்குப் பிறகு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட குஜராத் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. குஜராத்தில் நிரந்தர அமைதி நிலவுகிறது. இப்போது ஊரடங்கு உத்தரவு எதுவும் இல்லை. அந்த குற்றவாளிகள் மீண்டும் தலைதூக்கவில்லை. மீண்டும் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவே இல்ல்லை. எனவே அமித் ஷா கூறியது முற்றிலும் உண்மை.

இந்த தேர்தலில் குஜராத்தில் மீண்டும் பாஜக தான் வெல்லும். காங்கிரஸ் ஆட்சியில் அங்கு வன்முறையும் மட்டும் தான் இருந்தது. அமைதியும் வளர்ச்சியும் இல்லை. பாஜக வந்த பிறகு தான் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு குஜராத் தேர்தல் மீண்டும் ஒரு தோல்வியை தான் கொடுக்க போகிறது.


22 ஆண்டுகள் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன். இருந்துள்ளேன் எனச் சொல்வதை விட 22 ஆண்டுகள் காங்கிரஸில் காலத்தை வீணடித்துள்ளேன் என சொல்லலாம். முன்பு நாங்கள் ஒரு குடும்பத்தை வணங்கி வந்தோம். இப்போது பாஜகவால் நாங்கள் நாட்டை வணங்குகிறோம். இந்துக்கள் அமைதியை விரும்புவார்கள். பொதுவாக கலவரங்களில் ஈடுப்பட அவர்கள் விரும்ப மாட்டார்கள். நான் காங்கிரஸில் இருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பேன். இந்துக்கள் அமைதியை விரும்புவார்கள் என நான் சொல்வதைக் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்க முடியுமா? நான் உண்மையைத் தான் சொல்கிறேன்” என்றார்.

பிறகு ராகுல் காந்தியை ஏன் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு பேசுனீர்கள் என்ற கேள்விக்கு , ‘ ஆமா. ராகுல் இப்போது பார்க்க சதாம் உசைன் போல் தான் இருக்கிறார். நான் அவரது லுக் அப்படி இருக்கிறது என்றேன். ராகுல் அழகான , கவர்ச்சியான நபர். தற்போது தாடியுடன் சுற்றி வரும் ராகுலை நீங்கள் இப்போது சதாம் உசேன் புகைப்படத்துடன் அவரது புகைப்படத்தை ஒப்பிட்டு பாருங்கள். நான் சொல்வதில் உங்களுக்கே தெரியும். அவர் ஷேவ் செய்தால், அவரது தாத்தா நேருவை போல் அப்படியே இருப்பார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் டெல்லி பெண் சாரதாவை அவரது காதலன் கொலை செய்தது ‘’லவ் ஜிஹாத் தான்’’ என்று சொல்லுகிறீர்கள் என்ற கேள்விக்கு , ‘ அந்த பெண் சாரதா இந்து. அவரது இஸ்லாமியக் காதலன ஆப்தாப் தான் கொலை செய்துள்ளார். லவ் ஜிஹாத் என்றால் என்ன என்பதை சட்டப்பூர்வமாக வரையறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உண்மையில் லவ் ஜிஹாத் ஒரு சதி, முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை இஸ்லாத்திற்கு மாற்றும்படி வற்புறுத்துவதற்கான சதி. இடதுசாரி சார்புடையவர்களுக்கு நான் கூறிவது ஒரு வகுப்புவாத கருத்தாக இருக்கலாம். ஆனால் நான் இதை ஒரு தேசிய உணர்வில் சொல்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com