இமாச்சல் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

இமாச்சல் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி
இமாச்சல் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச முதல்வராக சமீபத்தில் சுக்விந்தர் சிங் சுகு பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் மற்றும் பி எஸ் ஹூடா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக டெல்லி சுற்றுப்பயணத்தில் இருக்கும் சுகு, முன்னதாக ராஜஸ்தானில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

டெல்லியில், கடந்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல கட்சித் தலைவர்களை சந்தித்த சுகு, ஹிமாச்சல் அமைச்சரவை அமைப்பது குறித்தும் விவாதித்தார். இந்நிலையில், ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு தொண்டை வலி உடல் சோர்வு ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இன்று வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com