ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 479 பேர் வேட்புமனு

ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 479 பேர் வேட்புமனு
ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 479 பேர் வேட்புமனு

ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 479 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 

ஹிமாச்சலப்பிரதேசத்தில் வரும் நவம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நட்சத்திர பேச்சாளர்களையும் பாஜக நியமித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாளான நேற்று மட்டும் 275 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமாலும் அடங்குவார். 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கு 479 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் வீரபத்ரசிங், அர்க்கி தொகுதியில் போட்டியிடுகிறார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com