68 தொகுதிகளை கொண்ட இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரேகட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
இமாச்சலில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில், பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 21 ஆயிரத்து 92 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அங்கு 25 லட்சத்து 68 ஆயிரத்து 761 ஆண் வாக்காளர்களும், 24 லட்சத்து 57 ஆயிரத்து 166 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இமாச்சல்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்முறையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

