இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு
Published on

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

கிண்ணார் மாவட்டத்தின் Reckong Peo பகுதியில் உள்ள வீட்டுக் கூரைகள், சாலைகள் என அனைத்தும் பனிப்போர்வை மூடிக் காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சிம்லா மாவட்டத்தில் சாலை மற்றும் தெருக்களில் 2 மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com