'பக்தர்கள்' சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

'பக்தர்கள்' சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

'பக்தர்கள்' சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
Published on

ஹிமாச்சலபிரதேசம் அருகே தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு, தனியார் பேருந்து ஒன்று சென்று ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கங்கரா மாவட்டம்  தலியாரா என்ற பகுதியில்  பேருந்து சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com