’நோ மீன்ஸ் நோ’ - பாலியல் வன்கொடுமை புகாரில் கைதான நபருக்கு ஜாமீன் மறுப்பு

’நோ மீன்ஸ் நோ’ - பாலியல் வன்கொடுமை புகாரில் கைதான நபருக்கு ஜாமீன் மறுப்பு
’நோ மீன்ஸ் நோ’ - பாலியல் வன்கொடுமை புகாரில் கைதான நபருக்கு ஜாமீன் மறுப்பு

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார் இமாச்சல பிரதேச மாநிலம் நீதிபதி.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவிலிருந்து 90 கி.மீ தொலைவிலுள்ள ராஜ்கரைச் சேர்ந்த ஒருவர் டிசம்பர் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் டிசம்பர் 17ஆம் தேதி இரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை வீட்டில் விடுவதாகக் கூறி ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால், அவர் பாதை மாறி, ஆள் நடமாட்டமில்லாதப் பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச்சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவிக்கவே அந்த நபர் 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். பிறகு அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்ற பெண், இதுபற்றி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் காவல்துறையில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்திருக்கிறார். அதன்படி, அடுத்தநாள் அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான நபர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியபோது, நீதிபதி அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்ததோடு, கடுமையான சாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சித்காரா, ‘’NO MEANS NO - என்ற எளிமையான வாக்கியத்தை புரிந்துகொள்வதுகூட சில ஆண்களுக்கு கடினமாக இருக்கிறது. இல்லை என்றால் அது ஆமாம் என்று அர்த்தம் கொடுக்காது. அதற்கு அந்த பெண் வெட்கப்படுகிறாள் என்று அர்த்தமாகாது; அதற்கு அந்த ஆண் தன்னை சமாதானப்படுத்த வேண்டும் என பெண் நினைக்கிறாள் என்று அர்த்தமாகாது; அந்த பெண் தன்னை பின் தொடரவேண்டுமென நினைக்கிறாள் என்று அர்த்தமாகாது; NO என்ற வார்த்தைக்கு அதற்குமேல் விளக்கமோ அல்லது நியாயப்படுத்துதலோ கிடையாது. அத்துடன் முடிந்துவிடும், ஆண் அந்த இடத்திலேயே நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும், அந்த பெண் NO என்று கூறியபிறகு, அங்கு அன்பிற்கும், காதலுக்கும் இடமில்லை. ஆண்களுக்கு பாலியல் தொடர்பான பாடங்களை சிறுவயதிலிருந்தே முறையாக கற்பித்தால் பிற்காலத்தில் சமூகத்தில் இதுபோன்று வளர்ந்து நிற்கமாட்டார்கள்’’ என்று கூறி, ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com