\
ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
Published on

ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா சார்பில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தமாக  68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் எப்படியாது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. தற்போது அதற்கேற்ப பாஜக சார்பில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 40 பேர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com