ஹிமாச்சல் ‌பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு

ஹிமாச்சல் ‌பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு

ஹிமாச்சல் ‌பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு
Published on

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ‌4‌4ஆக உயர்ந்துள்ளது. 

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு பஞ்ஜார் என்ற பகுதியில் இருந்து ‌கடகுஷானி என்ற ‌மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கோர்ச் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயம் அடைந்த ‌34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‌ள்ளனர். 

பயணிகளை அதிகம்‌ ஏற்றிச்சென்றதே பேருந்து பள்ளத்தில் கவிழ காரணம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஹிமாச்சல் பிரதேச முத‌ல்வர் ஜெய் ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com