’பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு’ - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனது. மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலக மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். மகளிருக்காக ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com