“சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சராக அமித் ஷா தேவையில்லை”- உத்தவ் தாக்கரே

“சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சராக அமித் ஷா தேவையில்லை”- உத்தவ் தாக்கரே
“சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சராக அமித் ஷா  தேவையில்லை”- உத்தவ் தாக்கரே

சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக அமித் ஷா உதவி தேவையில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனிடையே கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக அமித் ஷா உதவி தேவையில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகுவார் என பால்தாக்கரேவிடம் ஏற்கெனவே நான் உறுதி அளித்திருக்கிறேன். அதனை நான் நிறைவேற்றுவேன். அதற்காக அமித் ஷா மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் உதவி தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ தவறான நபர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக நான் உணர்கிறேன். பேச்சுவார்த்தைக்கான எங்களது கதவுகள் திறந்தே உள்ளன. பாஜக எங்களை ஏமாற்றிவிட்டது. அதனால் அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com