மின் சைக்கிள்களின் விலையை ரூ.15 ஆயிரம் வரை குறைக்க ஹீரோ நிறுவனம் முடிவு!

மின் சைக்கிள்களின் விலையை ரூ.15 ஆயிரம் வரை குறைக்க ஹீரோ நிறுவனம் முடிவு!

மின் சைக்கிள்களின் விலையை ரூ.15 ஆயிரம் வரை குறைக்க ஹீரோ நிறுவனம் முடிவு!
Published on

மின் சைக்கிள்களை உருவாக்கி வரும் ஹீரோ சைக்கிளின், ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம், ஐந்து வகையான சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.

மின்சார வாகனக் கொள்கையின் அடிப்படையில் டெல்லி அரசு மின்சார வாகனத்திற்கு வரிச் சலுகையும் மானியமும் வழங்கி வருகிறது. இந்தச் சலுகையைப் பெற தற்போது ஹீரோ லெக்ட்ரோ நிறுவனமும் தகுதி பெற்றுள்ளது.

இதையடுத்து, தனது ஐந்து வகையான மின்சார சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், மின்சார சைக்கிள்கள் 23 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com