\
நொறுக்கு தீனிகளுக்கு பதில் பாதாம், பிஸ்தா - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

நொறுக்கு தீனிகளுக்கு பதில் பாதாம், பிஸ்தா - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

நொறுக்கு தீனிகளுக்கு பதில் பாதாம், பிஸ்தா - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு
Published on

அலுவல் கூட்டங்களின் போது இனி பிஸ்கட் மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக வால்நட்ஸ், பாதாம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கீழ் வரும் அனைத்து துறைகளிலும் இது உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பாதாம், உலர் பழங்கள், பயிறு வகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இம்முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் மற்ற அமைச்சகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com