மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி
மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கடந்த வாரம் கவிழ்ந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஆளுநர் உத்தரவின் பேரில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பாஜகவின் சுதின் முங்கந்திவாரும் சிவசேனா ஷிண்டே பிரிவின் பரத் கோகவாலே-வும் கொண்டு வந்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்படி அரசுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை நடைபெற்றது. அரசின் வெற்றிக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் ஷிண்டே அரசை ஆதரித்து 164 பேர் வாக்களித்தனர். 99 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானம்வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு மாறியுள்ளனர். இவர்கள் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா நியமித்த கொறடாவை சபாநாயகர் அங்கீகரித்ததை எதிர்த்து தாக்கரே தரப்பு சிவசேனாவினர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com