காஷ்மீரில் பனிப்பொழிவு....சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பூவுலகின் சொர்க்கமாக கருதப்படும் காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் குளிர் பூஜ்ய டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் வீடுகளிலும் பொது இடங்களிலும் வெள்ளை போர்வையை போர்த்தியது போல பனி கொட்டிக் கிடக்கிறது. 40 நாள் பனிப்பொழிவுக் காலம் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து காஷ்மீர் பகுதிகள் முழுவதும் பனியால் சூழ்ந்திருப்பதால் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளும் அங்கு களைகட்டியுள்ளன. எனினும் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையான முகல் சாலையில் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல இமாசல பிரதேசத்தின் சிம்லா உள்ளிட்ட இடங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.