ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. தால் ஏரி உறையும் நிலை; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
ஜம்மு காஷ்மீரில் -2 தாண்டிய வெப்பநிலை... கடும் பனிப்பொழிவை கொண்டாடும் மக்கள்..
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் குளிர்காரணமாக புகழ்பெற்ற தால் ஏரி உறையும் நிலையில் காணப்படுகிறது. ஸ்ரீநகரில் தற்போது மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிரின் தாக்கம் நிலவுகிறது. இதன்காரணமாக தால் ஏரியின் ஒரு பகுதி உறையும் நிலையில் காணப்படுகிறது. இதனால் ஏரியில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள தோடா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவியது. வானில் இருந்து மழைச்சாரல் போன்று பொழிந்த பனியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று வெண்மையாக காட்சியளிக்கிறது. இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு விடுமுறையை கழிக்க காஷ்மீரில் குவிந்து வருகின்றனர்.