இந்தியா
கேதர்நாத்தில் கடும் பனிபொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேதர்நாத்தில் கடும் பனிபொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் பனிகாலம் தொடங்கியுள்ளது. டெல்லி, ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. அங்குள்ள கோயில் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.