குல்மார்க்கை மூடிய பனிப்பொழிவு - சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள்

குல்மார்க்கை மூடிய பனிப்பொழிவு - சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள்
குல்மார்க்கை மூடிய பனிப்பொழிவு - சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள்

ஜம்மு & காஷ்மீரின் பிரபல குளிர்கால சுற்றுலாத்தலமான குல்மார்க்கில் வெள்ளைப்போர்வை போன்று காணப்படுகிறது பனிப்பொழிவு. அங்கு கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவும் மழையும் மாறிமாறி பெய்துகொண்டிருக்கிறது. பணியாட்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி தரையை மூடியுள்ள பனியை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குல்மார்க். பனிச்சறுக்கு மற்றும் பனி விளையாட்டுகளுக்கு பெயர்போன இடமான குல்மார்க்கில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 49 கி.மீ தூரத்தில் மேற்கு இமாலயாவின் பிர் பஞ்சால் பகுதியில் குல்மார்க் அமைந்திருக்கிறது.

யூனியன் பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு புதிய பனி அலை தாக்கியிருப்பதகாவும், இதனால் மத்திய மற்றும் உயர்ந்த இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே ராம்பன் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் அதீத பனிப்பொழிவால் சில இடங்களில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள சில சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மலைகளிலிருந்து பாறைகள் சாலைகளில் உருண்டு விழுந்ததால், கிட்டத்தட்ட 300 வாகனங்கள் பிரதான சாலைகளில் ஸ்தம்பித்து நின்றதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதுதவிர, ஸ்ரீநகரில் பனிச்சரிவுக்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு ஞாயிறு இரவிலிருந்து திங்கட்கிழமை காலைவரை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமான அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com