\
இமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் !

இமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் !

இமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் !
Published on: 

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பனிப் பொழிவில் தோட்டக்கலைத்துறை ஆய்வாளர்கள் உள்பட 12 பேர் சிக்கியுள்ளனர். 

லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்துக்கு தோட்டக் கலைத்துறையினர் 10 பேர் மற்றும் அவர்களுக்கு உதவியாளராக இரு உள்ளூர் வாசிகள் ஆய்வு நடத்த சென்றுள்ளனர். ஆய்வுகளை முடித்து கொண்டு திரும்பியபோது அங்கு ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

ரோஹ்டங் சுரங்கப்பாதை உள்ளிட்டவை மூடப்பட்டதால் தாங்கள் வெளியேற முடியாமல் லாஹவுல்-ஸ்பிடியில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளதாக ஆய்வாளர்களில் ஒருவர் காவல்துறைக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். ஆய்வாளர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com