தலைநகர் டெல்லியில் பரவலாக கனமழை பெய்தது.
டெல்லியில் இந்த ஆண்டு பருவமழை 16 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை தாமதமாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் சில சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.