மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம், திரிபுரா

மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம், திரிபுரா
மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம், திரிபுரா

அசாம், திரிபுரா மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அசாம் மாநிலத்தில்  அண்மையில் பருவம் தவறிய மழையால் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பல பகுதிகள் தற்போதைய பருவமழையால் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தராங் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு மேலே வெள்ளம் பாய்வதால் 100க்கும் அதிகமான லாரிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. கவுகாத்தியில் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும், இதுவரை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 55 பேர் உயிரிழந்துள்ளனர்.  திரிபுரா மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 155 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ளத்தால் இப்பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலத்த மழையால் ஹவுரா நதியில் வெள்ளம் அபாய அளவை கடந்துள்ளது.

இதையும் படிக்கலாம்: கண்ட நேரத்தில் அழைத்து ஆபாசமாக பேசுகின்றனர்’- கூகுளின் நடவடிக்கையால் ஆர்பிஐ ஆளுநர் கவலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com