இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான மழை பெய்ததன் காரணமாக திங்கள்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தர்மசலாவில் இருக்கும் மாஞ்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரக்கார் கிராமத்தின் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தர்மசலாவில் 10 கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
இதேபோல ஜம்மு காஷ்மீரிலும் கடுமையான இயற்கை சீற்றம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு நேற்று முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல சிம்லா சுற்றுலாத் தலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.