மும்பையில் கனமழையால் கடும் பாதிப்பு

மும்பையில் கனமழையால் கடும் பாதிப்பு

மும்பையில் கனமழையால் கடும் பாதிப்பு
Published on

மும்பையில் கனமழையால் சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த மழை காரணமாக சிவாஜி நகர், மான்குர்த் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரில் கடும் மழை பெய்து வரும் நிலையில் அந்நகரின் முக்கிய பகுதியான மெரைன் டிரைவ் சாலையில் கடல் நீர் சாலைகளுக்கே வந்துவிட்டது. வேகமாக அடித்த அலைகள் தடுப்புச் சுவரை மீறி சாலையில் வந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலர் குடும்பத்துடன் வந்து கடல் அலை சீறிப்பாயும் காட்சியை கண்டு ரசித்தனர்


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com