\
மும்பையில் கனமழை: 75 விமானங்கள் ரத்து

மும்பையில் கனமழை: 75 விமானங்கள் ரத்து

மும்பையில் கனமழை: 75 விமானங்கள் ரத்து
Published on

மும்பையில் 75 விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மும்பை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையத்திற்கு வர வேண்டிய 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரவலாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com