இந்தியா
மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
மும்பையில் பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. மும்பையில் உள்ள தாழ்வான பகுதிகளான தாராவி, பரில், மட்டுங்கா உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தப்படி செல்கின்றன. சில இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிறுவனர்கள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்களுக்கு மழைக்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.