வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் வதோதரா நகரில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி, இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் முதலைகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் பணிகளையும் மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதே போல் ராஜஸ்தான் மாநிலத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை காரணமாக காஷஅமீர் பள்ளத்தாக்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்திலும் பரவலாக கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.