இந்தியா
ம.பி-யில் தொடர் கனமழை - பசுபதிநாதர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்
ம.பி-யில் தொடர் கனமழை - பசுபதிநாதர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்
மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பசுபதிநாத் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சர் பகுதியில் ஒடும் சிவ்னா ஆற்று நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த நீர் பிரபல கோயிலான பசுபதிநாதர் கோயிலுக்குள் புகுந்துள்ளது. கோயிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் பாதி மறையும் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் கோயில் வளாகத்தில் முன் இருந்து பொருட்கள் நீரில் மறைந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சிவ்னா ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். மழை தொடர்ந்தால் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

