\
மும்பையில் மீண்டும் பலத்த மழை - மக்கள் தவிப்பு

மும்பையில் மீண்டும் பலத்த மழை - மக்கள் தவிப்பு

மும்பையில் மீண்டும் பலத்த மழை - மக்கள் தவிப்பு
Published on

மும்பையில் மீண்டும் பலத்த மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன் 3 மணிநேரத்தில் 25 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழையால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகள் இடிந்தது உள்ளிட்ட பாதிப்புகளில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

விட்டுவிட்டு பெய்யும் மழையால் செம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்குள் மீண்டும் மழைநீர் புகுந்தது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com