கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பகுதிகள்... 31 பேர் உயிரிழப்பு

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பகுதிகள்... 31 பேர் உயிரிழப்பு
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பகுதிகள்... 31 பேர் உயிரிழப்பு

கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் 31 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலங்கானாவில் கொட்டி வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்ததால் தத்தளித்து வருகின்றன. தலைநகர் ஹைதராபாத் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், பாலங்கள், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹைதராபாத் மட்டுமின்றி, பண்ட்லகுண்டா, ரங்காரெட்டி, யதாத்ரி புவனகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் முழுவதும் மழை பாதிப்புகளால் 15 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவிலும் விசாகப்பட்டினம், சோடாவரம், எலமஞ்சிலி, அனகர்பள்ளி, கிழக்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் தொடர்கின்றன. வம்சதாரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. அம்மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா, ஆந்திரா வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் பேசினர். மீட்புப்பணிகளில் மத்திய அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மழை, வெள்ள பாதிப்புகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com